தமிழ்நாடு மாநிலம், சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டம், மடப்புரம் கிராமத்தில் அருள்மிகு அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்திரகாளியம்மன் திருக்கோயில் என்று அழைக்கப்படுகின்ற இத்திருத்தலம் வைகை ஆற்றுக்கு அருகில் அமைந்துள்ளது. செவ்வக வடிவிலான வளாகச் சுவர்களுக்கிடையே வடபுறமும், கீழ்புறமும் வாயில்களைப் பெற்று திருக்கோயில் விளங்குகிறது. திருச்சுற்று மதில்களுக்குள் தனித்தனியே 11 சன்னதிகளில் இத்திருத்தலத்தின் ஆட்சி தெய்வங்களான அருள்மிகு அடைக்கலம் காத்த அய்யனார் சன்னதி, அருள்மிகு பத்திரகாளியம்மன் சன்னதி மற்றும் 9 பரிவார தெய்வங்கள் அமைந்துள்ளன. வைகை ஆற்றங்கரையில் சுமார் 3.54 ஏக்கர் பரப்பளவில் உள்ள இத்திருக்கோயிலின் வடக்குத் திசையில் முதன்மை கோபுரம் 5 நிலைகளுடன் 5 கலசங்களும், கிழக்குத் திசையில் உள்ள கோபுரம் மூன்று நிலைகளுடன் 3 கலசங்களுடன் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் குதிரை தனது...