அருள்மிகு அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்திரகாளியம்மன் திருக்கோயில், மடப்புரம் - 630611, சிவகங்கை .
Arulmigu Adaikalamkatha Iyanar And Bathirakaliamman Temple, Madapuram - 630611, Sivagangai District [TM035703]
×
Temple History
தல வரலாறு
புராணத்தின்படி 2300 ஆண்டுகளுக்கு முன் மும்மூர்த்திகளும் கெளரி தாயாருடன் திருப்புவனம் ஸ்தலத்திற்கு வேட்டையாட வந்தனர். அப்போது இவ்வூர் அடர்ந்த மரங்கள் சூழ்ந்த பெருங்காடாக இருந்து வந்தது. அப்போது சிவபெருமான் பார்வதி தேவியைப் பார்த்து, காடு வெகு தொலைவில் பரந்து விரிந்து உள்ளது. உன்னால் வேட்டைக்கு வர இயலாது. ஆகவே நீ இங்கே இரு எனக் கூறினார். அப்போது பார்வதிதேவி சிவபெருமானைப் பார்த்து நான் எப்படித் தனிமையில் இருப்பது? எனக் கேட்க சிவபெருமான் பார்வதிதேவிக்குத் துணையாக அய்யனார் என்ற மகனை உருவகம் செய்து வைத்துவிட்டு வேட்டையாடச் செல்கிறார். அப்போது பார்வதி தேவி சிவபெருமானைப் பார்த்து நான் இங்கே இருப்பதால் இந்தத் தலத்துக்குச் சிறப்பு நிலை கொடுக்க வேண்டும் எனப் பார்வதிதேவி கேட்க, சிவபெருமான் இத்திருத்தலத்திலிருந்து...புராணத்தின்படி 2300 ஆண்டுகளுக்கு முன் மும்மூர்த்திகளும் கெளரி தாயாருடன் திருப்புவனம் ஸ்தலத்திற்கு வேட்டையாட வந்தனர். அப்போது இவ்வூர் அடர்ந்த மரங்கள் சூழ்ந்த பெருங்காடாக இருந்து வந்தது. அப்போது சிவபெருமான் பார்வதி தேவியைப் பார்த்து, காடு வெகு தொலைவில் பரந்து விரிந்து உள்ளது. உன்னால் வேட்டைக்கு வர இயலாது. ஆகவே நீ இங்கே இரு எனக் கூறினார். அப்போது பார்வதிதேவி சிவபெருமானைப் பார்த்து நான் எப்படித் தனிமையில் இருப்பது? எனக் கேட்க சிவபெருமான் பார்வதிதேவிக்குத் துணையாக அய்யனார் என்ற மகனை உருவகம் செய்து வைத்துவிட்டு வேட்டையாடச் செல்கிறார். அப்போது பார்வதி தேவி சிவபெருமானைப் பார்த்து நான் இங்கே இருப்பதால் இந்தத் தலத்துக்குச் சிறப்பு நிலை கொடுக்க வேண்டும் எனப் பார்வதிதேவி கேட்க, சிவபெருமான் இத்திருத்தலத்திலிருந்து 3 மைல் தொலைவிற்குள் வைகை ஆற்றில் நீராடுபவர்களுக்குப் புனித நீரான காசியில் நீராடிய புண்ணியம் கிடைக்கும் என்று சிவபெருமான் அன்னை பார்வதி தேவியின் விருப்பத்தை ஏற்று இத்திருதலத்தை புனிதமாக்கினார். அதன் பின்னர் பார்வதி காளி வடிவில் இத்திருத்தலத்தில் எழுந்தருளி அருள்மிகு பத்திரகாளியம்மனாக அருள் பாலித்து வருகிறார்.
ஒருமுறை பக்தன் ஒருவன் பத்திரகாளியம்மன் முன் அமர்ந்து வரம் வேண்ட பத்திரகாளியம்மன் பக்தனை குதிரை வடிவு கொள்ளச் செய்து தனக்கு நிழல் கொடுக்க அருள் செய்கிறார். அன்று முதல் அந்த பக்தன் குதிரை வடிவிலிருந்து தனது இருகால்களை தூக்கி இரண்டு பூதகணங்கள் தலையில் வைத்தவாறு நிழல் கொடுக்க அருள்மிகு பத்திரகாளியம்மன் நின்ற நிலையில் இருந்து அருள் பாலித்து வருகிறார்.
இத்திருக்கோயிலுக்கு மற்றொரு புராண வரலாறும் உள்ளது. ஒரு பிரளயக் காலத்தில் மதுரை மாநகரமே வெள்ளத்தால் சூழப்பட்டு முற்றிலும் மறைந்து விட்டது. அப்போது மீனாட்சி தாயார் மதுரை எல்லையைக் காட்டவேண்டும் என கேட்க, ஆதிகேசவன் வெளிப்பட்டு மதுரையின் நான்கு எல்லைகளையும் சுற்றி வளைத்து தற்போது உள்ள மடப்புரத்தில் தனது படத்தையும், வாலையும் ஒன்று சேர்த்து இருந்த இடம் படப்புரம் என்று அழைக்கப்பட்டு பிற்காலத்தில் மடப்புரம் என்றாயிற்று.